கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வெவ்வெறு மாநிலங்களில் பணிபுரிந்துவந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் விதமாக மத்திய அரசு மே 1ஆம் தேதியிலிருந்து சிறப்பு ரயில் சேவைகளை இயக்கிவருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை சூரத்திலிருந்து ஹஜிபூருக்கு செல்ல சிறப்பு ரயலில் பயணித்தபோது குடிபெயர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில் உத்தர பிரதேச மாநிலம் பல்லியா அருகே வந்த போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த குடிபெயர்ந்த தொழிலாளர் பிகார் மாநிலம் சரன் மாவட்டத்தைச் சேர்ந்த பூஷன் சிங் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரது உடலை பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பவைக்கப்பட்டது. இந்த நிலையில், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, ரயிலில் மின்விசிரிகளும் சரியாக ஓடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இடையூறுகளுக்கு இடையே தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக குடிபெயர்ந்த தொழிலாளர்கள் இதுபோன்ற மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:உத்ரா கொலை வழக்கு: பாம்பின் டி.என்.ஏ.வை பரிசோதிக்க முடிவு!