டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் பமுரா என்ற கிராமத்திற்கு தன் மனைவியுடன் வந்த குடிபெயர்ந்த தொழிலாளர் தற்கொலை செய்து கொண்டார். இவர் டெல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தினக்கூலியாக வேலை செய்து வந்தவர். சமீபத்தில் அவருடைய மனைவியுடன் சொந்த ஊர் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்நபரின் உறவினர், “கரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து வீடு திரும்பிய அவர்களுக்கு, உணவு பற்றாக்குறை இருந்தது. இந்நிலையில், அவருடைய மனைவிக்கும், அவருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.