கோவா மாநிலம் தபோலிம் பகுதியில் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான மிக்-29கே ரக போர் விமானத்தில், கேப்டன் ஷியோகாந்த், லெப்டினல் கேடர் தீபக் யாதவ் உள்ளிட்டோர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விமானத்தின் இன்ஜினில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதையடுத்து விமானத்தை பத்திரமாக தரையிறக்க நினைத்தனர். ஆனால் அதற்குள் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் கேப்டன் ஷியோகாந்த், லெப்டினல் கேடர் தீபக் யாதவ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த விமான விபத்தை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்திப்படுத்தியுள்ளார். தபோலிம் பகுதியில் மீட்கப்பட்ட இருவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்றார்.