கரோனா பாதிப்பு பணத்தைக் கடந்து உயிர், சுகாதாரம், உணவு ஆகியவையே முக்கியம் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவற்றிற்குப் பின் தான் மக்களுக்கு வேலையின் தேவை ஏற்படுகிறது. இதனால் உலகின் பல நிறுவனங்களும் தங்களது அலுவலங்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இளைஞர்கள் அதிகம் உள்ள நாடான இந்தியாவில் இளைஞர்கள் எந்த நிறுவனத்தில் அதிகமாக வேலை பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்ற ஆய்வு நடத்தப்பட்டது. ரான்ஸ்டெட் என்ற நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 33 நாடுகளிலுள்ள 6 ஆயிரத்து 136 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் 1 லட்சத்து 85 ஆயிரம் பணியாளர்கள் வாக்களித்துள்ளனர்.
இந்த ஆய்வு சிறந்த நிறுவனத்திற்கான மதிப்பாக எது தேவை என்ற நடந்ததப்பட்ட வேலை-வாழ்க்கை இரண்டுக்கும் உள்ள சமநிலைக்கு 43 சதவிகிதம் பேரும், நல்ல சம்பவளம் மற்றும் பணியாளர் நன்மைகளுக்கு 41 சதவிகிதம் பேரும், பணி உறுதிக்கு 40 பேரும் வாக்களித்துள்ளனர்.
இதில் முதலிடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இரண்டாவது இடத்தில் சாம்சங் இந்தியா, மூன்றாவது இடத்தில் அமேஸான் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளது.
நிதி மேலாண்மை, பணியாளர்களிடையே நல்ல பெயர், டெக்னாலஜியில் அதீத பயன்பாடு ஆகியவற்றால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இன்ஃபோசிஸ், ஐந்தாவது இடத்தில் மெர்சிடெஸ் - பென்ஸ், ஆறாவது இடத்தில் சோனி, ஏழாவது இடத்தில் ஐபிஎம், எட்டாவது இடத்தில் டெல், ஒன்பதாவது இடத்தில் ஐடிசி, பத்தாவது இடத்தில் டாடா கன்சல்டெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது.