விவசாயிகள் போராடத்திற்கு பிரபல மாடல் மியா கலிபா தொடர்ந்து ஆதரவு குரல் அளித்துவருகிறார். இந்தியாவில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துவரும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டேன் என சமீபத்தில் மியா தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஒரு நாளைக்கு ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டுவிட்டு பாசிசத்தை விலக்கி வையுங்கள் என பிரபல மாடல் மியா கலிபா கிண்டல் அடித்துள்ளார்.
பாசிசத்தை விலக்கி வையுங்கள்... விவசாயிகளின் குரலாக மாறும் மியா! - பாசிசம் மியா கலிபா
மும்பை: ஒரு நாளைக்கு ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டுவிட்டு பாசிசத்தை விலக்கி வையுங்கள் என பிரபல மாடல் மியா கலிபா கிண்டல் அடித்துள்ளார்.
![பாசிசத்தை விலக்கி வையுங்கள்... விவசாயிகளின் குரலாக மாறும் மியா! மியா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10535479-356-10535479-1612700572475.jpg)
தட்டு முழுவதும் விதவிதமான உணவை அடுக்கிவைத்துவிட்டு சாப்பிடும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அவர், விவசாயிகளுக்கு பாராட்டுகள் என பதிவிட்டிருந்தார். பின்னர், சாப்பிடும் வீடியோவை வெளியிட்ட அவர், "ருசியான உணவை விருந்தளித்த ரூபி குமாருக்கு நன்றி. குலாப் ஜாமுன் அளித்த ஜக்மீத் சிங்குக்கு நன்றி.
இனிப்பு வகைகளை அதிகமாக திண்றுவிடுவேன் என்பதால் எப்போதும் கவலைப்படுவேன். எனவே, உணவு எடுத்து கொள்ளும்போதுதான் அதனை சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு ஒரு குலாப் ஜாமூன் சாப்பிட்டுவிட்டு பாசிசத்தை விலக்கி வையுங்கள் என பலர் சொல்கிறார்கள். அதுபோல் செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளார்.