தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்த யுக்டி 2.0ஐ (Yukti 2.0), என்ற இணையதளத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உருவாக்கினர். முதலில் இந்த தளத்திற்கு மாசிவ் இந்தியன் நாவல்டி டெபாசிட்டரி [Massive Indian Novelty Depository (MIND)] என பெயரிட்டுள்ளனர். ஆனால், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இந்திய பெயரை வைக்க பரிந்துரைத்ததன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடியோ மாநாட்டில் இந்த யுக்டி 2.0ஐ (Yukti 2.0), என்ற இணையதளத்தை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிமுகம் செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், " யுக்டி 2.0 என்பது யுக்டியின் முந்தைய பதிப்பை விட சிறப்பு வாய்ந்ததாகும். நமது இளைஞர்களின் புதுமையான படைபாற்றல்களையும் கருத்துக்களையும் வெளியுலகிற்கு காட்சிப்படுத்தவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி கல்வி நிறுவனங்களில் புதுமையை வளர்க்க உதவிகரமாக இருக்கும்.