தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2020, 11:58 AM IST

ETV Bharat / bharat

ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனையை விசாரிக்க குழு!

டெல்லி: ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனையை விசாரிக்க அமைச்சரவைக் குழு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

MHA
MHA

ராஜீவ் காந்தி பவுன்டேஷன், ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவற்றின் பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. அண்மையில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றது தொடர்பாக புகார் எழுந்தது.

இந்நிலையில், வருமான வரி, ஹவாலா முறைகேடு, அந்நிய செலாவணி முறைகேடு ஆகிய கோணங்களில் ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனையை இந்த குழு விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா - சீனா எல்லைப் பூசலின் போது சீனாவிடமிருந்து ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் பணம் பெற்றதாக பாஜக குற்றஞ்சாட்டியது. பதிலுக்கு பிரதமர் நிவாரண நிதிக்கு சீன நிறுவனங்கள் பண செலுத்தியுள்ளதாக காங்கிரஸ் தரப்பும் பதில் குற்றச்சாட்டை முன்வைத்தது.

இதையும் படிங்க:"நினைவிருக்கிறதா?" - பிரதமர் நரேந்திர மோடியின் பழைய ட்வீட்டை வைத்து கேள்வியெழுப்பும் காங்கிரஸ்!

ABOUT THE AUTHOR

...view details