தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ.) முக்கிய செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சி ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பின் அலுவலகங்களை திறக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மூன்று இடங்களில் என்ஐஏ அலுவலகங்கள் - மத்திய அரசு! - மத்திய உள்துறை அமைச்சகம்
சென்னை உள்ளிட்ட மூன்று நகரங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) அலுவலகங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
என்.ஐ.ஏ
இதன் மூலம் தேசப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில், கௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய ஒன்பது நகரங்களில் என்.ஐ.ஏ அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அக்.5 முதல் 2ஜி வழக்கு மீண்டும் விசாரணை