தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா நடவடிக்கைகள்: 4 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - மத்திய அரசு அதிரடி

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஐஏஎஸ் அலுவலர்கள் நான்கு பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Shah
Shah

By

Published : Jun 15, 2020, 4:14 PM IST

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் டெல்லியில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 41,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,327 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்கம் தொடர்ந்தால், மருத்துவமனையில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை ஏற்படும் என டெல்லி அரசு அறிவித்தது. இந்நிலையில், நிலைமையைச் சமாளிக்கும் வகையில் நான்கு ஐஏஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபார் தீவுகளிலிருந்து இருவரும், அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து இருவரும் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "அந்தமான் நிகோபாரிலிருந்து அவனிஷ் குமார், மோனிகா பிரியதர்ஷினி, அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து கவுரவ் சிங் ராஜவாட், விக்ரம் சிங் மாலிக் ஆகியோர் கரோனா மேலாண்மைக்காக டெல்லிக்கு மாற்றப்படுகின்றனர்.

மேலும் எஸ்.சி.எல். தாஸ், எஸ்.எஸ். யாதவ் ஆகிய மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் பங்கேற்று டெல்லி நிலவரம் குறித்து ஆலோசித்தனர். படுக்கை பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் 500 ரயில் பெட்டிகளில் 8,000 படுக்கைகளை கொண்டு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நவம்பரில் உச்சமடையுமா கரோனா பாதிப்பு? ஐசிஎம்ஆர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details