கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நடுத்தர, ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வு பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகிறது.
ஒருபுறம் கரோனா என்றால் மற்றொருபுறம் வருமானமின்மை. சிறு, குறு வியாபாரிகள், வணிகர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என மாத ஊதியத்தையும், தினசரி வியாபார பணத்தையும் நம்பி வாழ்ந்து வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.