ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி நதியின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு பழைய கட்டடமும் இரண்டு கூரைகளும் இடிந்து விழுந்தன. ஹைதராபாத்தில் வீடுகளுக்குள்ளேயும் வெள்ளம் புகுந்தது.
ஹைதராபாத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 15 பேர் உயிரிழந்த நிலையில், தெலங்கானாவில் இதுவரை 32 பேர் மழையால் உயிரிழந்தனர். ராணுவமும் பேரிடர் மீட்புப் படையினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்துவருகின்றனர். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மருத்துவ வசதிகளை அளித்துவருகின்றன.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, “பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானா, ஆந்திராவை உள் துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்துவருகிறது.