நாடு முழுவதும் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு குறித்தும் வைரஸ் பரவல் குறித்தும் அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைப்பேசி வாயிலாக கருத்துகளைக் கேட்டுவருகிறார்.
கோவாவில் சுற்றுலாத் துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், "உணவகங்கள், மால்கள், ஜிம்கள் ஆகியவை தகுந்த இடைவெளியைப் பின்பற்றி இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.
உள்துறை அமைச்சகத்திடம் இதற்கான அனுமதியைக் கோரியுள்ளோம். இது குறித்த அறிவிப்பும் வழிமுறைகள் உள்துறை அமைச்சகத்தால் நாளை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.