மத்திய டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே சிறிய அளவிலான குண்டு வெடிப்பு ஜனவரி 29ஆம் தேதி நிகழ்ந்தது. குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்ற பகுதிக்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அரசின் மூத்த அலுவலர்கள் ஆகியோர் விஜய் சவுக்குக்கு வந்திருந்தனர். அங்கிருந்து 1.4 கிமீ தொலைவில் ஐஇடி குண்டு வெடித்தது. நல்வாய்ப்பாக, எந்தவித உயிர் சேதம், பொருள் சேதமும் ஏற்படவில்லை.