தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2016 சென்னை வெள்ளத்தைப் போல் காட்சியளிக்கும் மகாராஷ்டிராவின் கோலாப்பூர்..!

கோலாப்பூர்: 1989, 2005ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெய்து வரும் கனமழையால் வெள்ளம் வந்ததையடுத்து பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

வெள்ளம்

By

Published : Aug 6, 2019, 10:42 PM IST

2016ஆம் ஆண்டு பெய்த கனமழையால் சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளித்தது. அதன் பிறகு ஒவ்வொரு முறை கனமழை பெய்தாலும் வெள்ளம் வர வாய்ப்புள்ளது என பொதுமக்கள் இன்றும் பேசி வருகின்றனர்.

இதேபோல் தற்போது 1989, 2005ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் கனமழை பெய்துவருகிறது. கிட்டத்தட்ட மழை நீர் முழுவதும் சூழ்ந்து ஆறுகளுக்கு நடுவில் முளைத்த கட்டடங்கள் போல் நகரம் காட்சியளிக்கிறது.

சென்னை வெள்ளத்தைப் போல் காட்சியளிக்கும் மகாராஷ்ட்ராவின் கோலாப்பூர்

அனைத்து ஆறுகளும், வடிகால்களும், ஓடைகளும் மகாபூரை எட்டியுள்ளன. அதேபோல் ஜூபிலி ஆற்றின் நீர் நகரின் பல பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. அதிலும் பங்சகங்கா நதியின் நீர்மட்டம் 52 அடியாக உயர்ந்துள்ளதையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மேலும் மழை நீர் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புகுந்ததையடுத்து, நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details