லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் முதன்மை ஆலோசகராக இருந்துவந்த இ. ஸ்ரீதரன் உடல்நிலையை காரணம் காட்டி தன் பதவியில் இருந்து இன்று விலகினார். அவரின் விலகல் கடிதத்தை லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், ஒப்புதலுக்காக மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.
மெட்ரோ மேன் ராஜினாமா! - ஸ்ரீதரன்
லக்னோ: மெட்ரோ திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தியதில் முக்கிய பங்காற்றிய ஸ்ரீதரன் லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் தலைமை ஆலோசகர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
Metro Man
நாடு முழுவதும் மெட்ரோ ரயில் திட்டங்களை கையாள்வதில் சிறப்பாக செயலாற்றிய இ. ஸ்ரீதரன் லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் தலைமை ஆலோசகராக 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவரின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் பத்ம விபூஷன் விருதை இந்திய அரசு 2008ஆம் ஆண்டு வழங்கியது குறிப்பிடத்தக்கது.