தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு சுவாசக் கருவியை உருவாக்கும் மெர்சிடிஸ் எஃப் 1 குழு - கரோனா

லண்டன்: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதான முறையில் சுவாசிக்கும் வகையிலான சுவாசக் கருவியை உருவாக்கும் பணியில் லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மெர்சிடிஸ் எஃப் 1 குழு ஈடுபட்டு வருகிறது.

Mercedes F1 team
Mercedes F1 team

By

Published : Apr 1, 2020, 9:46 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரசால் இதுவரை உலகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் நுரையீரல் முதலில் பாதிக்கத் தொடங்கி நாளடைவில் சுவாசிப்பதில் பெரும் சிரமம் ஏற்படும். இதுவே மக்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாகக் கூறப்படுகிறது.

இதற்கு தீர்வுகாணும் விதமாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதான முறையில் சுவாசிக்கும் வகையிலான சுவாசக் கருவியை உருவாக்கும் பணியில் லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மெர்சிடிஸ் எஃப் 1 குழு ஈடுபட்டு வருகிறது.

பிரிட்டனை தளமாகக் கொண்ட ஏழு அணிகளை உள்ளடக்கிய குழுவினர், மெர்சிடிஸ் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி பொறியாளர்கள் மற்றும் யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இணைந்து, ஆக்ஸிஜன் முக கவசத்திற்கும், முழு காற்றோட்டத் தேவைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு கருவியை உருவாக்கிவருகிறது.

பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால், ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரசால் பாதிப்பால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு வயதானவர்கள் அதிகளவில் உயிரிழந்துவரும் நிலையில், இதற்கு தீர்வுகாண மெர்சிடிஸ் எஃப் 1 குழுவினர், லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றிவருகின்றனர்.

இதையும் பார்க்க: கரோனா வாரியர்ஸ்க்கு ஒரு கோடி அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details