இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “எந்தவொரு தலைவரின் நினைவுச் சின்னங்களும் இதுபோன்ற காலங்களில் உங்களைப் பாதுகாக்காது! மருத்துவமனைகள் மட்டுமே அதனை செய்யும்! அதனால்தான் நான் நினைவுக் கட்டடத்தை எதிர்க்கிறேன். அதற்கு பதிலாக அந்த பணத்தை வைத்து மருத்துவமனைகளை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியிருந்தார்.
முன்னதாக அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் பொதுப் பணத்தில் நினைவுச் சின்னங்களை கட்ட முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு முன்வந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக எச்சரித்திருந்தார்.