தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகத் தீர்மானம்: வழக்குரைஞர்கள் கண்டிப்பு

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியவர்களை சக வழக்குரைஞர்கள் கண்டித்துள்ளனர்.

Members of SCBA  Justice Arun Mishra  Supreme Court Bar Association (SCBA)  resignation of SCBA president  SCBA president Dushyant Dave  Prime Minister Narendra Modi  நீதிபதி அருண் மிஸ்ரா, உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், துஷ்யந்த் தேவ், பிரதமர் மோடி புகழாரம், வழக்குரைஞர்கள் கண்டன தீர்மானம்

By

Published : Mar 5, 2020, 11:50 AM IST

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகத் தீர்மானம்: வழக்குரைஞர்கள் கண்டிப்பு

டெல்லியில் நடந்த நீதித் துறை மாநாட்டில் நீதிபதி அருண் மிஸ்ரா, “பிரதமர் நரேந்திர மோடியை பல்துறை வித்தகர்” எனப் பேசினார். இதற்கு எதிராக உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கண்டனம் தெரிவித்தனர்.

இவ்விவகாரம் குறித்து அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தில், “நீதிபதி ஒருவர் அரசின் தலைவரை இவ்வாறு புகழ்வது தகுதியற்றது. நீதிபதிகள் நடுநிலையைக் கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகிறோம்” எனக் கூறியிருந்தனர்.

இந்த அறிக்கைக்கு சங்கத்தின் சில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் சங்கத் தலைவர் துஷ்யந் தேவ் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த மாதம் 26ஆம் தேதி வெளியான அந்தத் தீர்மானத்தில் 11 பேர் கையொப்பமிட்டிருந்தனர்.

இதையும் படிங்க:பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு இத்தனை கோடி செலவா?

ABOUT THE AUTHOR

...view details