தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்று விடுதலையாகும் மெகபூபா முப்தி? - ஜம்மு காஷ்மீர்

ஸ்ரீநகர்: வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி இன்று விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mehbooba Mufti
Mehbooba Mufti

By

Published : Mar 25, 2020, 12:21 PM IST

Updated : Mar 25, 2020, 12:28 PM IST

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. அதைத்தொடர்ந்து, 2019 - ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

சுமார் எட்டு மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டுவருகின்றனர். பரூக் அப்துல்லா இம்மாத தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நேற்று, உமர் அப்துல்லா விடுவிக்கப்படார்.

அதேபோல மெகபூபா முப்திக்கு விதிக்கப்பட்ட விட்டுக்காவலுக்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டதாகவும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் முடிந்தவுடன் இன்று விடுவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தனியாக இருக்க டிப்ஸ் வேண்டுமா - உமர் அப்துல்லா ட்வீட்!

Last Updated : Mar 25, 2020, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details