சென்னையச் சேர்ந்தவர் இட்லி இனியவன். இவர், இட்லி வியாபாரி என்பதால், இன்று இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொலான்ட் ட்ரம்ப்- பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் சந்திப்பை கெளரவிக்கும் வகையிலும், இரு நாட்டு தலைவர்களை வரவேற்கும் விதமாகவும், 50 கிலோ எடை கொண்ட இரண்டு பிரம்மாண்ட இட்லிகள் தயாரித்துள்ளார். மேலும் அந்த இரு இட்லிகளிலும் ட்ரம்ப், மோடி ஆகியோரின் உருவங்களை வரைந்துள்ளார்.
இதுதொடர்பாக இனியவன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், "இருபெரும் தலைவர்கள் சந்திக்கின்ற இன்றைய நாளில் அவர்களை வரவேற்கும் விதமாகவும், இந்நிகழ்வை பெருமைப்படுத்தும் விதமாகவும் 50 கிலோ எடையுள்ள இரண்டு பிரம்மாண்ட இட்லிகளை தயாரித்து, அவற்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் உருவங்களை வரைந்துள்ளேன்.