கர்நாடகாவின் கொப்பால் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாச குப்தா. இவர் புதிதாகக் கட்டியுள்ள வீட்டின் கிரகப்பிரதேச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகின. காரணம், அப்புகைப்படங்களில் இருந்த உயிரிழந்த அவரது மனைவியின் அச்சு அசலான சிலை. புகைப்படத்தை உற்று நோக்கினால் மட்டுமே அது சிலை என்பதைக் கண்டறிய முடியும். அந்த அளவிற்கு தத்ரூபமாக அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.
இச்சிலையை வடிவமைத்தவர் ஸ்ரீதர் மூர்த்தி. பல்வேறு தரப்பிலிருந்தும் இவருக்கு பாராட்டுக்கள் குவியத் தொடங்கி நிலையில், அவரிடம் இது குறித்து பேசியபோது, நாகாசாந்திரா பகுதியில் 22 ஆண்டுகளாக அவர் சிற்பியாக பணியாற்றி வருவது தெரிய வந்தது.
சிற்பமாக வடிவமைக்கப்பட்ட பெண்ணுடன் குடும்பத்தினர் மேலும், பாரம்பரியமாக அவரது குடும்பத்தினர் சிற்பத் தொழிலை செய்து வருவதும், அவரது தந்தை காசிநாத்தும் அவரது சிற்பங்களுக்காக மாநில அரசின் பல விருதுகளை வென்றுள்ளார் என்பதும் தெரிய வந்தது.
டிகிரி படித்துள்ள ஸ்ரீநிவாஸ் மூர்த்தி இதுவரை ஆயிரகணக்கான சிற்பங்களை செதுக்கியுள்ளார். ”சிமெண்ட், மரம் உள்ளிட்ட பொருள்களை விடவும் சிலிக்கானில் சிலை செய்வது மிகவும் சிறப்பானது. சிலிக்கானில் சிலை செய்தால் சிலைக்கு சேதாரம் ஏற்பட்டாலும் எவ்வித பிரச்னையும் வராது என்பதோடு, நிறமும் மாறாமல் இருக்கும். இந்த சிலிக்கான் சிலையை முதல் தடவையே சிறப்பாக செய்வதற்கு 15 பேர் ஒன்றிணைந்து முயற்சி செய்துள்ளனர்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”சிலிக்கான் பொருளை பயன்படுத்துவதற்கு முன்னதாக ஃபைபர் கிளாஸ்களை பயன்படுத்தி பிரதி எடுத்துக் கொண்டோம். களிமண் மற்றும் ப்ளாஸ்டர் ஆஃப் பேரிஸ் ஆகியவற்றை பயன்படுத்தி மோல்ட் எடுத்துக் கொண்டோம். பின்னர் வடிவமைக்கப்பட்ட சிலிக்கான் மேல் ஃபைபர் கிளாஸ் பயன்படுத்தி சிலையை வடிவமைத்தோம்'' என்றார்.
இதையும் படிங்க:அமெரிக்கா டூ துளசேந்திரபுரம்; கமலா ஹாரிசின் வேர்களை நோக்கிய பயணம் இது!