முதல் ஐந்து ரபேல் போர் விமானங்கள் நேற்று (ஜூலை 30) இந்தியா வந்தடைந்தன. இந்த ரபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய விமானி என்ற பெருமையை ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஹிலால் அகமது ரத்தேர் பெற்றுள்ளார். சுமார் 7 ஆயிரம் கி.மீ வான்வழி பயணத்துக்குப்பின் இந்தியாவின் அம்பாலா பகுதியில் ரபேல் விமானத்தை தரையிறக்கிய நபர்தான் இந்த விங்க் கமாண்டர் ஹிலால்.
ஜம்மு காஷ்மீரில் பிறந்த இவரின் தந்தை முகம்மது அப்துல்லா ரதர் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். 1962ஆம் ஆண்டு இந்தியா - சீனா இடையே நடைபெற்ற போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களில் ஹிலாலின் தந்தையும் ஒருவர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் முடித்த ஹிலால், 1988ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் போர் விமானி ஆனார்.