பாலக்காடு (கேரளா) :கைப்பந்து விளையாடும் ’சீசர்’ என்ற நாயின் காணொலி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
தேர்ந்த விளையாட்டு வீரரைப் போல் கைப்பந்து விளையாடும் நாய் ’சீசர்’ - வைரல் காணொலி! - சீசர் நாய்
சீசர் எனும் லாப்ரடெர் வகை நாய் கைப்பந்து விளையாடும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
எடத்தனட்டுக்கராவைச் சேர்ந்த முபீன் தான் இந்த லாப்ரடெர் இன நாயான சீசரின் உடமைதாரர். கல்லூரி மாணவரான முபீன், நாய்கள்மீது அதிக பற்றுக்கொண்டவர். ஒரு மாத குழந்தையாக தனது வீட்டிற்கு சீசரைவாங்கி வந்த இவர், மூன்று மாதத்திலிருந்தே அதற்கு பந்து விளையாட பயிற்சியளித்து வந்துள்ளார்.
தனது நண்பர்களுடன் சிறிய கால்வாயில் முபீன் கைப்பந்து விளையாடும் நேரத்தில், சீசரும் அவர்களுடன் இணைந்து கொள்ளுமாம். தற்போது சீசர் இணையத்தில் வைரலான நிலையில், முபீன் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.