தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி அருகே லேசான நிலநடுக்கம்! - டெல்லி நிலநடுக்கம் அண்மை செய்தி

டெல்லி : நொய்டா அருகே நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

noida earthquake

By

Published : Jun 4, 2020, 12:36 PM IST

இதுகுறித்து அம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைநகர் டெல்லியில் உள்ள நொய்டா பகுதிக்கு 19 கிமீ தென்கிழக்கே உள்ள உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம புத்தா மாவட்டத்தில் நேற்று இரவு 10.42 மணிக்கு லேசான நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவுகோலில் 3.0ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் நான்கு மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது" என்றார்.

முன்னதாக, கடந்த மாதம் 28ஆம் தேதி ஹரியானாவின் ரோஹ்டாக் பகுதியில் 4.6, 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

noida earthquake

இதையும் படிங்க : சீன விமானங்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா!

ABOUT THE AUTHOR

...view details