பிறந்து மூன்று மாதங்களே ஆன ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட இரட்டைக் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக 70 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து சென்ற சுகாதார ஊழியர்களுக்குப் பாராட்டுகள் குவிகிறது. ஓர்ச்சா தொகுதியில் உள்ள அபுஜ்மத்தைச் சேர்ந்த இந்த சுகாதார ஊழியர்கள் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிக்கு சென்று மருத்துவ உதவிகள் வழங்கி பிறருக்கு முன்மாதிரியாகவும் திகழ்கின்றனர்.
மேலும், இந்தக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதால், சுகாதாரப் பணியாளர்கள், குழந்தைகளையும், தாயையும் குண்ட்லாவில் உள்ள ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்திற்கு மாற்றியுள்ளனர்.
'நக்சல்களின் குகை' என உள்ளூர்வாசிகள் குறிப்பிடப்படும் இந்த கிராமத்தை அடைவது மருத்துவர்களுக்கு அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. ஆனால், இவற்றுக்கெல்லாம் பயப்படாத மருத்துவ ஊழியர்கள், அடர்ந்த காடுகள் வழியாக சுமார் 40 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே பயணித்து அந்த கிராமத்தை அடைந்துள்ளனர்.