தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 22, 2021, 9:31 PM IST

Updated : Jan 22, 2021, 9:47 PM IST

ETV Bharat / bharat

வாரணாசியின் மருத்துவக் கட்டமைப்பு 6 ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது: மோடி

வாரணாசியின் மருத்துவக் கட்டமைப்பு, சுகாதாரம் ஆகியன கடந்த ஆறு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Medical infrastructure in Varanasi, PM Modi on vaccinators of COVID 19 vaccination, COVID 19 vaccination drive in Varanasi, Varanasi parliamentary constituency, வாரனாசி மருத்துவக் கட்டமைப்பு, பிரதமர் நரேந்திர மோடி உரை, latest modi news, மோடி செய்திகள், பிரதமர் செய்திகள், pm latest news, pm modi latest news, pm modi latest speech
pm modi latest speech

டெல்லி:வாரணாசியில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 22) காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 'நாடு கரோனா தடுப்பூசி காரியத்தில் தன்னிறைவு அடைந்துள்ளது. உள்நாட்டிலேயே நாம் இரண்டு தடுப்பூசிகளை தயாரித்து வருகிறோம். இது உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வாரணாசியைப் பொறுத்தவரை, கடந்த ஆறு ஆண்டுகளில் மருத்துவத்துறையும், அதன் கட்டமைப்புகளும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்படும். 2014ஆம் ஆண்டிலிருந்தே நான் வாரணாசி தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளேன்.

மனித - விலங்கின மோதல்: முறையாகப் பின்பற்றப்படுகிறதா வன விலங்கு பாதுகாப்புச் சட்டம்?

மக்களுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன். இதுவரையில் இங்கு 20ஆயிரம் முன்களப் பணியாளர்களுக்கு, 15 மையங்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவும் யாரும் தயங்க வேண்டாம். அது முற்றிலும் பாதுகாப்பானது' என்றார்.

இந்தியாவில் இதுவரை 10 லட்சத்து 43 ஆயிரத்து 534 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 22, 2021, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details