கரோனா காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, அதனை திறக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், மருத்துவ கல்லூரிகளை வரும் ஒன்றாம் தேதி அல்லது அதற்கு முன்பாக திறக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
மாநிலம், யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில், "மருத்துவ கல்லூரிகளை வரும் ஒன்றாம் தேதி அல்லது அதற்கு முன்பாக திறக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கலாம். தனிநபர் இடைவெளி, கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை அனைத்து கல்லூரிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.