உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் லாலா லஜபதி ராய் நினைவு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் காது, மூக்கு மற்றும் தொண்டைப் பிரிவு துறைத் தலைவராக டாக்டர் கபில் உள்ளார்.
இவர் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் நடந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தை கேள்விபட்ட மாணவியுடன் பயிலும் மாணவர்கள் கல்லூரியில் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லூரி தலைவர் சமாதானம் பேசினார். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.