தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இலவச உணவு வழங்கும் புபனேஷ்வர் மாநகராட்சி!

புபனேஷ்வர்: பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குவவோருக்கு இலவச உணவை வழங்கும் திட்டத்தை புபனேஷ்வர் மாநகராட்சி தொடங்கியுள்ளது.

Food for plastic waste
Food for plastic waste

By

Published : Dec 18, 2019, 8:33 PM IST

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மத்திய அரசு, கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தடைசெய்தது. அதேபோல, பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் இல்லா தேசத்தை உருவாக்குவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் ஒடிசாவின் தலைநகர் புபனேஷ்வரில், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று புபனேஷ்வர் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 'பிளாஸ்டிக்கு கழிவுகளுக்கு உணவு' என்ற இத்திட்டத்தை புபனேஷ்வர் மாநகராட்சி ஆணையர் பிரேம் சந்திர சவுத்ரி தொடங்கிவைத்தார்.

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இலவசமாக உணவை வழங்கும் புபனேஷ்வர் மாநகராட்சி

இதுகுறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், "புபனேஷ்வரிலுள்ள 11 அஹார் மையங்களில் 500 கிராம் பிளாஸ்டிக் கழிவுகளை வழங்கும் அனைவருக்கும் உணவுக்கான கூப்பன்கள் வழங்கப்படும்" என்றார். இதேபோல ஏழைகளுக்கு ஐந்து ரூபாய்க்கு உணவை வழங்கும் ஆஹார் திட்டத்தை ஒடிசா அரசு ஏப்ரல் 1, 2015இல் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பூசாரி!

ABOUT THE AUTHOR

...view details