மனித உரிமைகளின் போலிக்காரணத்தின் கீழ் சட்டத்தின் மீறல்களை மன்னிக்க முடியாது என சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகளைத் தடுக்கும் மற்றும் வெளிநாட்டு நிதியைக் கட்டுப்படுத்தும் தெளிவற்ற சொற்களைக் கொண்ட சட்டங்களைப் பயன்படுத்துவது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
இதைப்பற்றி ஐநா உயர் ஆணையர் பேச்லெட் தனது அறிக்கையில், இந்தியாவின் நீண்ட பாரம்பரியம் உலக அளவில் மனித உரிமை வாதத்தில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் தெளிவற்ற வரையறுக்கப்பட்ட சட்டங்கள் இந்த குரல்களைத் தடுக்க பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு வெளியுறவுத்துறை, '' சட்டம் மற்றும் சுதந்திரமான நீதித்துறை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயக நாடு இந்தியா'' என தெரிவித்திருந்தது.
கடைசியாக திருத்தப்பட்ட எஃப்.சி.ஆர்.ஏ, " தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இன்னும் நிர்வாக மற்றும் நடைமுறை தடைகளை உருவாக்கும்" என்று பேச்லெட் கூறினார். அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட பின்னர் அதன் இந்திய அலுவலகங்களை மூடிய வழக்கை மேற்கோளிட்டுள்ளது.