தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோத்தபய ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ கைது! - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது

டெல்லி: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து டெல்லியில் போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mdmk leader vaiko
mdmk leader vaiko

By

Published : Nov 28, 2019, 1:58 PM IST

Updated : Nov 28, 2019, 4:25 PM IST

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்று, இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெற்றி பெற்றதையடுத்து, அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றார்.

இலங்கையின் புதிய அதிபரான கோத்தபய ராஜபக்சவிற்கு இந்தியப் பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். மோடியின் வரவேற்பை ஏற்ற, கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

போராட்டம் செய்யும் மதிமுகவினர்

இந்நிலையில், கோத்தபய ராஜபக்ச வருகையை எதிர்த்து மதிமுக கட்சியின் சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போராட்டம் நடத்தினார். இதில், 'தமிழ் ஈழத்தில் நடைபெற்ற உள்நாட்டு போரில் லட்சக் கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டது மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் தான்.

போராட்டத்தில் வைகோ

தற்போதைய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தான்... தமிழ் ஈழ மக்கள் இறப்பிற்கு முக்கியக் காரணமானவர். மஹிந்த ராஜபக்சவை விடக் கொடுமையானவர், கோத்தபய ராஜபக்சே. இவரால் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறது. இந்தியா அவரை வரவேற்று பேசுவது, தமிழ் மக்களுக்கு எதிரானது' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லி காவல் துறையினர் வைகோவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: கோத்தபய ராஜபக்ச ரத்த வெறி பிடித்த மிகக்கொடியவன்' - வைகா கடும்தாக்கு

Last Updated : Nov 28, 2019, 4:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details