தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் மூன்று பேர் உயிரிழப்பு - Lack of ambulance service in Kota

ஜெய்ப்பூர்: சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் மூன்று பேர் உயிரிழந்த சம்பவங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

MBS Hospital case
MBS Hospital case

By

Published : May 20, 2020, 10:37 PM IST

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அமைந்துள்ள மஹாராவ் பீம்சிங் மருத்துவமனையில் நோயாளிகள் தொடர்ந்து மரணம் அடைவதாக மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது மூன்று நோயாளிகளின் மரணத்திற்கு காரணம் ஆம்புலன்ஸ் சேவை இல்லாதது தான் எனத் தெரியவந்துள்ளது.

கேஸ் 1 : சதீஷ் அகர்வால்(60) என்பவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர். அவரது உடல்நிலை மோசமடைய, அவரது மகன் மணீஷ் அகர்வால் ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஒரு மணி நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் அவர் தனது தந்தையை காய்கறி வண்டியில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுது தூரம் சென்றதும் நயாபுராவில் உள்ள அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சதீஷை மகாராவ் பீம்சிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

கேஸ் 2 :

சதீஷ் அகர்வாலுக்குப் பிறகு, ராஜஸ்தானின் ஃபதேகாடியில் வசிக்கும் க்ஷேத்ரபால் மீனாவும் இதே போன்ற காரணத்தால் இறந்தார். மே 3 ஆம் தேதி, க்ஷேத்ரபாலின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது, அதன் பிறகு அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸை அழைத்தனர், ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு காய்கறி வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். அங்கு அவர் இறந்து விட்டார் என தெரியவந்துள்ளது.

கேஸ் 3 :

இதே போல் 71 வயதான சரிதா தேவி, உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளார். ஒரு நாள் நிலைமை மோசமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் அவரும் இறந்துள்ளார். ஆக சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் மூன்று பேர் உயிரிழந்த சம்பவங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது

இதையும் படிங்க: லாக்டவுன் 4.0: கட்டுப்பாடுகளை நாங்கள் கூர்ந்து கவனிக்கிறோம் - உள்துறை அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details