கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் விகாஸ் (22). மருத்துவ மாணவரானஇவர், டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் பயின்று வந்தார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட மனநல பிரச்னை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மனநல வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
எய்ம்ஸ் மருத்துவ மாணவர் தற்கொலை: போலீஸ் விசாரணை - மருத்துவ மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் 22 வயதான மருத்துவ மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![எய்ம்ஸ் மருத்துவ மாணவர் தற்கொலை: போலீஸ் விசாரணை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் தற்கொலை: போலீஸ் விசாரணை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:34:01:1597129441-8375093-868-8375093-1597127040636.jpg)
Medical student committed suicide in aiims hospital
அங்கு அவர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்று மாலை ஆறு மணியளவில் தற்கொலை செய்துகொள்வதற்காக மாடியிலிருந்து குதித்துள்ளார். இதனைக் கண்ட மருத்துவர்கள், அவரை மீட்டு சிகிச்சையளித்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.