தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு - தலைவர்கள் வரவேற்பு

டெல்லி: புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் அறிவித்ததை, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.

மசூத் அசார்

By

Published : May 1, 2019, 10:22 PM IST

பிரதமர் நரேந்திர மோடி -

சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவித்தது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாகவும், கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் -

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா -

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது என, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம்

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் ஜநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது என, காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஆறுதலாக அமையும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details