கரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு மார்ச் 24ஆம் தேதி, நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த, இந்த ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது நான்காம் கட்டத் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்குத் தளர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - மாயாவதி - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கருத்து
ஊரடங்குத் தளர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
mayawati-welcomes-unified-policy-to-lift-lockdown
அதில் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசை பரிசீலிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கு அமல்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்குத் தளர்வு விவகாரத்தைப் பற்றி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் ஊரடங்குத் தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்; அப்படி செயல்பட்டால் அரசியல் தவிர்க்கப்பட்டு மக்கள் சரியான பயன்களை அனுபவிப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.