தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குமாரசாமிக்கு ஆதரவளிக்காத பகுஜன் எம்எல்ஏ நீக்கம்!

லக்னோ: நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆதரவாக வாக்களிக்காத பகுஜன் சமாஜ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினரை, அக்கட்சியின் தலைவர் மாயாவதி அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிள்ளார்.

mayawati

By

Published : Jul 24, 2019, 10:45 AM IST

கர்நாடக மாநிலத்தில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்தது. முதலமைச்சராக மஜத தலைவர் குமாரசாமி பதவி வகித்துவந்தார். மஜத - காங்கிரஸ் மட்டுமின்றி இந்த ஆட்சிக்கு அம்மாநிலத்தின் ஒரேயொரு பகுஜன் சமாஜ் சட்டப்பேரவை உறுப்பினரான மகேஷ் ஆதரவளித்துவந்தார். இவர் கொல்லிகலா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்தச் சூழலில், கடந்த மூன்று நாட்களாக இழுபறியில் இருந்துவந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று மாலை நடைபெற்றது. அப்போது குமாரசாமிக்கு ஆதரவாக 99 சட்டப்பேரவை உறுப்பினர்களும், பாஜகவிற்கு ஆதரவாக 105 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரவளித்திருந்தனர். இதனால் குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்தது.

முன்னதாக இதுபோன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் சமயத்தில், முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, அம்மாநிலத்தில் உள்ள தனது சட்டப்பேரவை உறுப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால் கட்சித்தலைமையின் கட்டளைக்கு இணங்காமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாயாவதி அவரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details