இதுதொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ட்விட்டரில், “உத்தரப் பிரதேச வருவாய் அலுவலர் தலித் சமூகத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்பவர் பாஜக எம்.பி. சுப்ரத் பதக் மற்றும் அவரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின. பணியிலுள்ள அலுவலரைத் தாக்குவது அவமானகரமானது” என கூறியிருந்தார்.
மற்றொரு ட்வீட்டில், “சிறைக்குச் செல்வதற்கு பதிலாக இந்த எம்.பி. வெளியில் சுற்றுவது வருத்தமளிக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளில், முதலமைச்சர் இந்த எம்.பி.க்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். எதிர்காலத்தில், இதுபோன்ற ஒரு சம்பவம் வரக்கூடாது” என தெரிவித்துள்ளார்.