17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்றவருகிறது. இந்தியாவிலேயே அதிக மக்களவைத் தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்தரப் பிரதேசம். இம்மாநிலத்தில், மிகவும் எதிர்பார்க்கக்கூடிய நட்சத்திர வேட்பாளர்களாக நரேந்திர மோடி, ஸ்மிருதி இரானி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், முலாயம் சிங் யாதவ், ஹேம மாலினி ஆகியோர் போட்டியிட்டனர்.
தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகப் பெரும்பான்மையையும் தாண்டி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பரப்புரையின்போது பாஜகவை மிகவும் கடுமைாயக விமர்சித்து வந்த மாயாவதி உத்தரப்பிரதேசத்தில் பின்னடவை சந்தித்துவருகிறார். கூட்டணிக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து மக்களின் வாக்குகளை பெற்று பாஜகவை ஒழித்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிவந்தார்.
கருத்துக்கணிப்புகளை தாண்டி வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலைப் பெற்று வருவது மாயாவதியின் முகத்திரையை கிழித்ததுபோல் இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி 16 மக்களவைத்தொகுதிகளில் மட்டுமே தனது செல்வாக்கை பெற்றுள்ளது.
தனது சொந்த மாநிலத்தில் தோல்வியைப் பெற்றிருப்பது அவரது பிரமதமர் கனவு தகர்ந்து போனதாக பார்க்கப்படுகிறது. மேலும் அஸ்திவாரம் இல்லாத மாயாவதி என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும், பாஜக உத்தரப் பிரதேசத்தில் 57 தொகுதிகளில் முன்னிலை பெற்றுவருகிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.