பிம் ஆர்மி எனும் தலித் அமைப்பின் தலைவர் சந்திரசேர ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுகிறார். நேற்று சாலை பேரணியுடன் வாரணாசியில் ஆசாத் பரப்புரையைத் தொடங்கியுள்ளார்.
வாரணாசியில் சந்திரசேகர் ஆசாத் போட்டி - மாயாவதி தாக்கு - வாரணாசி
லக்னோ: பிம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாதை வாரணாசியில் போட்டியிட வைத்து தலித் பிரிவினரின் வாக்குகளைப் பிரிக்க பாஜக சூழ்ச்சி செய்கிறது என மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் உத்ரபிரதேச முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவருமான மாயவதி பிம் ஆர்மி தலைவர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, தலித் பிரிவினரின் வாக்குகளைப் பிரித்து தனக்குச் சாதகமான முடிவுகளை உருவாக்கும் தீய எண்ணத்துடன் பாஜக சூழ்ச்சியாக பிம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாதை வாரணாசியில் போட்டியிட வைத்துள்ளது. பாஜகவின் சூழ்ச்சித் திட்டத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிம் ஆர்மி அமைப்பு தலித் விரோத எண்ணத்தைக் கொண்டு வெறுப்பரசியலை உருவாக்கி வருகிறது.
சந்திரசேகர் ஆசாதை எப்படியாவது சூழ்ச்சி செய்து பகுஜன் சாமஜ் கட்சிக்குள் நுழைத்துவிட வேண்டும் எனவும் பாஜக முயன்றது. பாஜக ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை பிரிவினருக்கு மிகவும் ஆபத்து. எனவே வாக்குகளைச் சிதறவிட்டு வீணடிக்காமல் மக்கள் சரியாக முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.