இந்திய, சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை திரும்பபெறுவதாக இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. இதனிடையே, சீனா தனது ராணுவத்தை திரும்பபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திரும்பபெறும் நடவடிக்கையை வரவேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான சசி தரூர், ஊடுருவலுக்கு முன்பிருந்த நிலையை மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.