உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக ரேஷன் அட்டை விநியோகத்தை தொழிலாளர் தினத்தில் (மே1) தொடங்கி வைத்தார்.
ரூ.300 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தினால், மாநிலத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள். இதன் மூலம், வெளி மாநிலங்களில் வேலைபார்த்து உத்தரப் பிரதேசத்திற்கு திரும்பிய தொழிலாளர்களும் வெளி மாநிலங்களில் உள்ள ரேஷன் அட்டை (கார்டு) மூலம் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.
ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கும் உணவுப் பொருள்கள் கிடைக்கும். இதுகுறித்து வீடியோ மூலம் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “போதுமான அளவு உணவு தானியங்கள் கையிறுப்பு உள்ளதாகவும் யாரும் பசியுடன் இருக்கும் நிலைக்கு தள்ளப்படமாட்டார்கள்” என்றும் தெரிவித்தார்.