கணிதவியலாளர் வசிஷ்ட நாராயண் சிங் (Vashishtha Narayan Singh) பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாதேபுராவிலுள்ள பூபேந்திர நாராயணன் மண்டல் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
வயது முதிர்வு காரணமாக அவதியுற்ற நிலையிலும் மாணவ-மாணவியருக்கு கணிதவியல் கல்வியை போதிக்க வேண்டும் என்ற முனைப்பில் தனது 67ஆவது வயதில் இந்த பணியை அவர் ஏற்றுக் கொண்டார்.
நன்கு அறியப்பட்ட நேதர்ஹாட் பள்ளியின் பழைய மாணவரான சிங் 1965 முதல் 1974 வரை அமெரிக்காவில் இருந்தார். அவர் நாடு திரும்புவதற்கு முன்பு நாசாவில் விண்வெளி கோட்பாட்டில் பணியாற்றினார். ஐ.ஐ.டி., கான்பூர், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (மும்பை) மற்றும் இந்திய புள்ளிவிவர நிறுவனம் (கொல்கத்தா) ஆகியவற்றில் கற்பித்துள்ளார்.
கணிதவியல் அறிஞர் வசிஷ்ட நாராயண் சிங் காலமானார் - Mathematician Vashishtha Narayan Singh
டெல்லி: பிரபலமான கணிதவியல் அறிஞர் வசிஷ்ட நாராயண் சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
சிங் எப்போதும் ஒன்றை கூறுவார். இந்த பிறவி கற்பித்தலுக்கானது. கற்பித்தல் எனது கொள்கை என்பார். வயது முதிர்ந்த நிலையிலும் இதனை அவர் கடைப்பிடித்து வந்தார். அவருக்கு பல உடல் உபாதைகள் இருந்தன. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல், மாணவ-மாணவியருக்கு கற்பித்தல் பணியை தொடர்ந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் பாட்னாவிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (Patna Medical College and Hospital (PMCH) அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. வசிஷ்ட நாராயண் சிங்கின் உடலுக்கு ஏராளமானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ரோஜாவின் ராஜா நேருவின் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை