மத்திய அரசு திட்டத்தின் கீழ் துவாரகாவில் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் வீடுகளை கோரி தனியார் நிறுவனம் ஒன்று விண்ணப்பித்திருந்தது . இருப்பினும், டெல்லி மேம்பாட்டு ஆணைய இதற்கு அனுமதிக்கவில்லை.
இருப்பினும் அரசு அனுமதி அளித்துவிட்டதைப் போல போலியான ஆவணங்களை இவர்கள் தயார் செய்துள்ளனர். மேலும், ஹேமந்த் தோமர், சதேந்திர மான், பிரதீப் ஷெஹ்ராவத் மற்றும் சுபாஷ் சந்த் ஆகியோர் இணைந்து முன்பணம் என்று சுமார் 4000 பேரிடம் இருந்து 400 கோடி ரூபாயை பெற்றுள்ளனர்.
பணம் அளித்தவர்களுக்கு வீடுகள் அளிக்கப்படவில்லை. மேலும், முன்பணமாக பெற்ற பணமும் திருப்பி அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட சதேந்திர மான், பிரதீப் ஷெஹ்ராவத், சுபாஷ் சந்த் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்யதனர்.
இந்நிலையில், இதில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி ஹேமந்த் தோமர் கொச்சி விமான நிலையத்திலிருந்து மாலத்தீவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது இன்று கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 'எட்டு மாதங்களில் 30 கோடி பேருக்கு கரோனா தடுப்பு மருந்து' - சுகாதாரத் துறை அமைச்சர்