தெலங்கானா மாநிலம் தண்டிகல் மாவட்டத்தில் விமானப்படை அகாடமி அருகே தனியாருக்குச் சொந்தமான ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்கசிவு காரணமாக நேற்று (ஆகஸ்ட் 22) இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து! - தீ விபத்து
ஹதராபாத்: தெலங்கானாவின் தண்டிகல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
Massive fire breaks out
இது தொடர்பான தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த மேட்சல், மல்கஜ்கிரி மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
முன்னதாக, தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நீர் மின் நிலையத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.