தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்க சந்தையில் பயங்கர தீவிபத்து ! - west bengal fire accident

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் அமைந்துள்ள ராபிந்திர நகர் சந்தையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Rabrindra Nagar Market fire accident, west bengal Siliguri Massive fire accident, மேற்கு வங்க சந்தையில் பயங்கர தீவிபத்து
மேற்கு வங்க சந்தையில் பயங்கர தீவிபத்து

By

Published : Feb 5, 2020, 6:22 AM IST

Updated : Feb 5, 2020, 7:29 AM IST

மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் சிலிகுரி நகரில் ராபிந்திர நகர் சந்தை அமைந்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை இந்தச் சந்தையில் உள்ள சில கடைகள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஐந்து தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஏழு கடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில், உயிரிழப்புகள் ஏதும் நிகழ்ந்ததாக செய்தி வெளியாகவில்லை.

இதையும் படிங்க : முடிவில்லா சோழர்கள்; முசிறியில் தடயங்கள்...

Last Updated : Feb 5, 2020, 7:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details