தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் போராட்டம்

புதுச்சேரி: ஊரடங்கு காரணத்தால் 8 மணி நேரப் பணியை 12 மணி நேரமாக மாற்றிய சட்டத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

marxist
marxist

By

Published : May 13, 2020, 5:18 PM IST

நாடு முழுவதும் பல மாநில அரசுகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மூன்றாண்டுகளுக்கு தொழிலாளர் நல சட்டங்களை ரத்து செய்வது எனவும், 12 மணி நேர வேலையை கட்டாயமாக்குவது, பகுதி நேரப் பணி ஊதியத்தை ரத்து செய்வது போன்ற தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றிய சட்டம் புதுச்சேரியில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் ஏஐசிசிடியூ மாநில தலைவர் மோதிலால் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் போராட்டம்

இதில் அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில், ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: செவிலியருக்குத் தலை வணங்கிய கிரண் பேடி!

ABOUT THE AUTHOR

...view details