கரோனா தாக்கமானது ஆட்டோமொபைல் துறையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் உள்நாட்டு வாகன விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. பல முன்னணி நிறுவனங்களாலும் ஒரு கார் கூட விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து கார் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. மேலும், பண்டிகை காலம் துவங்குவதை கருத்தில் கொண்டு மாருதி சுசூகி, ஹோண்டா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த சிறப்பு சலுகைகளை வாருங்கள் காண்போம்...
மாருதி சுசூகி:
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, மாறுபட்ட விலையில் லாபகரமான தள்ளுபடியை வழங்குகிறது. குறிப்பாக ஆல்டோ 800 மற்றும் எஸ்-பிரஸ்ஸோ கார்கள் தற்போது ரூ. 39,000 மற்றும் ரூ. 49,000 தள்ளுபடியில் கிடைக்கிறது. முன்னதாக, வாடிக்கையாளர்களுக்காக லாயல்டி ரிவார்ட்ஸ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. அதன்படி, அவர்களுக்கு கூடுதல் கார், காப்பீடு, எக்ஸ்டிரா ஸ்பேர் பார்ட்ஸ் போன்ற பலன்கள் கிடைக்கக்கூடும்.
Car model | Discount (Rs) |
Alto 800 | 39,000 |
S-Presso | 47,000 |
Wagon R(MT/CNG) | 36,000 |
Swift Petrol | 36,000 |
Brezza Petrol | 20,000 |
EECO 5 seater | 36,000 |
ஹூண்டாய்:
தென்கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், கிராண்ட் ஐ10 காருக்கு ரூ. 40,000 தள்ளுபடியும், கிராண்ட் ஐ 10 நியோஸ் காருக்கு ரூ. 25,000 தள்ளுபடியும், சாண்ட்ரோ காருக்கு ரூ. 35,000 தள்ளுபடியும் அளிக்கிறது. இதுமட்டுமின்றி, ஹூண்டாய் புதிதாக கார் வாங்குபவர்களுக்கு நாடு முழுவதும் உறுப்பினர் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம், புதிய கார் வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதற்காக லைஃப் ஸ்டைல், பயணம், கல்வி, கார் ஸ்பேர் பார்ட்ஸ் போன்ற 21 பிராண்டுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
Car model | Discount (Rs) |
Santro | 35,000 |
Grand i10 | 40,000 |
Grand i10 Nios | 25,000 |
Elite i20 | 15,000 |
Aura | 15,000 |