தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் வீட்டில் தனிமை... இதான் வாய்ப்புனு காதலனுடன் யெஸ்ஸான திருமணமான பெண்! - Karnataka women escape for lover

பெங்களூரு: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த திருமணமான பெண் ஒருவர், ரகசியமாக காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : May 22, 2020, 11:43 AM IST

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் கர்கலா பகுதியைச் சேர்ந்த முபினா (28) என்ற பெண்ணுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு சஜித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் பூனேவில் வசித்து வந்த நிலையில், அவ்வப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வந்துள்ளது. இதனால் முபினா கணவருடன் சண்டையிட்டுவிட்டு, தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு வந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில், தாயார் வீட்டின் அருகே வசித்து வந்த இளைஞர் ஒருவருடன் முபினாவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே முபினா குடும்பத்தினர் அனைவரும், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மங்களூர் சென்று வந்துள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து சுகாதாரத் துறையினர் முபினா, அவரது தாயார், சகோதரர் ஆகிய மூவரையும் வீட்டிலேயே 14 நாள்கள் தனிமைப்படுத்தியிருக்க அறிவுறுத்தினர். ஆனால், முபினா தந்தை மட்டும் மங்களூரிலேயே சிக்கிக்கொண்டார். இச்சூழலில், முபினா யாருக்கும் தெரியாமல் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். குடும்பத்தினர் தனிமைப்படுத்தலில் இருந்ததால், அவர்களால் முபினாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து மங்களூருவில் அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு முபினாவின் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது மகள் காதலனுடன் சென்றுவிட்டாள் என்ற தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்திற்குச் சென்று புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:காதலனை கரம் பிடிக்க நினைத்த மாணவி... போக்சோவில் சிக்கவைத்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details