மத்தியப் பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு 20 வயது இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது குறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நான்கு பேரை கைது செய்தனர். அவர்கள் தர்மேந்திர ராய் (45), விக்ரம் கரோஷியா (32), ராஜேஷ் காக்ரே (40), ராகேஷ் கரோஷியா (40) ஆவார்கள்.
இவர்கள் மீது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தின்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து ரயில்வே காவலர்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தனியாரால் துப்புரவுப் பணிக்கு வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள். துர்கா பூஜையில் கலந்துகொண்டு தனியாக நின்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.