புதுச்சேரி கென்னடி நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் நாகராஜ். இவர், திருமண நிகழ்ச்சிகளுக்கு சவுண்ட் சர்வீஸ் வழங்குவது மட்டுமின்றி திருமண ஊர்வலத்தில் மணமகன், மணமகளை அழைத்து செல்லும் காருக்கு அலங்காரம் செய்து வாடகைக்கு விட்டுவந்தார்.
ஜூஸ் கடையாக மாறிய திருமண ஊர்வலத்துக்குச் செல்லும் கார் - puducherry corona virus
புதுச்சேரி: கரோனாவால் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறாததால் திருமண ஊர்வலத்தில் பயன்படுத்தும் கார் ஜூஸ் கடையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனாவால் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களாக திருமண விழா இல்லாததால் தனது கடையை நாகராஜ் தற்காலிமாக மூடியுள்ளார். வருமானத்திற்கு வழி இல்லாத காரணத்தினால் மணமக்களை அழைத்து வரும் காரை ஜூஸ் கடையாக மாற்றி தற்போது தொழில் செய்து வருகிறார். கரோனா பலரின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இதையும் படிங்க:மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை!